Feedback/15

From Noolaham Foundation
< Feedback
Revision as of 02:29, 23 March 2024 by Loashini (talk | contribs) (Created page with "{{Feedback}} <br/> நூலக நிறுவனத்தில் எனது "மறுகா","களட்டி" மற்றும் எனது அப்பாவ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search


நூலக நிறுவனத்தில் எனது "மறுகா","களட்டி" மற்றும் எனது அப்பாவின் "படிக்கம்" புத்தகங்களையும் எண்ணிமப்படுத்துவதற்காக இன்று சென்றிருந்தேன். நீண்ட நாட்களாய் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த விடயம் இன்று சாத்தியப்பட்டது மகிழ்ச்சி. அலுவலக நடைமுறை சிறப்பாக உள்ளது. உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்.

"த. மலர்ச்செல்வன்" - F143
22.02.2024
நூலகத்தை பார்வையிடல்



மட்டக்களப்பு நூலக நிறுவன அலுவலகத்திற்கு இன்று சென்றிருந்தேன். நூலக நிறுவனத்தினரின் சிறப்பான செயற்பாடுகள் கண்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இன்றைய தினம் பண்டைய ஓலைச்சுவடிகளில் இருந்து பழங்கால மருத்துவக் குறிப்புகளை வருடி மூலம் (By Using Scanner) ஆவணப்படுத்தும் ஓர் முக்கிய செயற்பாட்டில் மட்டக்களப்பு நூலகப் பணியாளர்கள் மிகவும் பொறுப்போடு செயற்பட்ட வண்ணமிருந்தனர். பல தசாப்தங்களுக்கு முன் எழுதப்பட்ட ஏட்டுச் சுவடிகளை நுணுக்கமாகப் பரிசீலித்து அவற்றை ஒழுங்குப்படுத்தும் நிறுவகத்தாரின் பணி மதிப்பிட முடியாது. தனிப்பட்ட ஒருவனாக அவர்களது செயற்பாடுகளில் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன். நூலக நிறுவனம் வலுவான, காலத்தால் அழிந்து போகக்கூடிய குறிப்புகளை ஆவணப்படுத்திப் பாதுகாக்கும் செயற்பாடு கண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

"எஸ். புண்ணியமூர்த்தி" - F144
04.03.2024
எண்ணிமப்படுத்தப்பட்ட ஆவணத்தை மீள பெற்றுக்கொள்ளல்.



நூலக நிறுவனம் தொடர்பான அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொண்டதோடு, இங்குள்ள பணியாளர்கள் இந்நிறுவனத்தை நாடி வருவோரை அன்புடன் அணுகி தேவையான தகவலை பெற பெரும் உதவி செய்கின்றனர்.

"கிரிசாந்தன் மயூர்தினி" - F145
18.03.2024
நூலகத்தை பார்வையிடல்



எனது பெயர் லாவணயா இலக்சுமணன். 1983ஆம் ஆண்டு எனது அப்பா யுத்தத்தின் காரணமாக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். நான் அங்கே பிறந்துள்ளேன். தமிழ் வரலாற்றை அறிய ஆசை அதனால் நூலக நிறுவனத்திற்கு பார்வையிட வந்தேன். மிக மகிழ்ச்சி. என்னால் முயன்ற உதவியை நான் செய்கிறேன்.

"லாவண்யா இலக்சுமணன்" - F146
20.03.2024
நூலகத்தை பார்வையிடல்



இன்று மட்டக்களப்பு நூலக நிறுவனத்திற்கு நண்பர் ஜோன்சனை சந்திப்பதற்கு வந்தபோது உண்மையில் நான் கற்க விரும்பியிருந்த பல்வேறு செயற்றிட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதை நான்கு உத்தியோகத்தர்கள் மூலம் அறிந்துக் கொண்டேன். உண்மையில் தமிழர் சமூகம் குறிப்பாக மட்டக்களப்பு பற்றிய வரலாற்று ஆவணங்களில் முக்கியமானதாக காணப்படும் "மூல வரலாற்று" ஆவணங்களின் காப்பக செயல்பாடு வெரும் கைங்காரியமாகவே என்னால் கருதப்படுகிறது. இந்த முயற்சிக்கு வித்திட்டவர்களையும் , வழிநடாத்துபவர்களுக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள். இங்கு இன்று சந்தித்த நான்கு உத்தியோகத்தர்களிடமும் நானும் சிலவற்றைக் கற்றுக்கொண்டேன்.

"முனைவர். ஞா. தில்லைநாதன்" - F147
21.03.2024
நூலகத்தை பார்வையிடல்