Template:Valiwest PS E-Library Implementation

From Noolaham Foundation
Revision as of 01:00, 22 March 2021 by Safna Iqbal (talk | contribs)
Jump to navigation Jump to search

வலிகாமம் மேற்கு பிரதேச சபை அதனது பிரதான நூலகத்தில் ஆசியா அறக்கட்டளையின் (Asia Foundation) நிதியுதவியுடனும் சபையின் சொந்த நிதிப்பங்களிப்புடனும் மின்னூலகச் செயற்றிட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்த விளைந்தது. இதற்கான முன்மொழிவு தயாரிப்பில் நூலக நிறுவனம் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கியிருந்தது. அத்துடன் தொடர்ந்தும் செயற்றிட்ட அமுலாக்கலில் தொழினுட்ப ஆலோசனை வழங்கி வருகின்றது. இச்செயற்றிட்டத்தின் செயற்பாடுகளில் வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு அதன் நூலகத்தின் செயற்பாடுகளையும் உள்ளடக்கி எண்ணிம கற்றல் வலைவாசல் ஒன்றினை உருவாக்கலும் அப்பிரதேசம் சார்ந்த அறிவு வளங்களை சேகரித்து எண்ணிமப்படுத்தி பதிவேற்றுதலும் அடங்கும்.