Difference between revisions of "Feedback/3"
Line 1: | Line 1: | ||
− | + | {{Feedback}} | |
− | |||
− | |||
− | |||
<br/> | <br/> | ||
நூலகம் மகத்தான சேவையைச் செய்து வருவதை அவதானிக்க முடிகிறது. | நூலகம் மகத்தான சேவையைச் செய்து வருவதை அவதானிக்க முடிகிறது. |
Revision as of 01:48, 15 January 2021
Archive 1 | Archive 2 | Archive 3 | Archive 4 | Archive 5 | Archive 6 | Archive 7 | Archive 8 | Archive 9 | Archive 10 | Archive 11 | Archive 12 |Archive 13 | Archive 14 | Archive 15 | Archive 16 | Archive 17 | Archive 18
நூலகம் மகத்தான சேவையைச் செய்து வருவதை அவதானிக்க முடிகிறது.
சிறிது தாமதமாக ஆரம்பித்தில் பதிவுகள் நடைபெற்றாலும், இப்பொழுது நான் வழங்கிய
அத்தனை புத்தகங்களும் நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதை அவதானித்தேன்.
கூடிய விரைவில் இந்நூல்களில் உள்ளடக்கங்களும் முழுமையாக சேர்க்கப்படும் என்று எண்ணுகிறேன்.
எனது புதிய புத்தகமான "திறனாய்வு" என்ற நூலை இன்று சமர்ப்பித்தேன்.
இவ் நூல் ஆவணப்படுத்தப்படும் என்று நம்புகிறேன். நூலக அலுவலகத்தில் பணிபுரியும்
நிஷாந்தினி மிகவும் பண்பாகவும், துரிதமாகவும் எமது பதிவுகளை சிறிது நேரத்தில் செய்து தந்தார்.
அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
கே.எஸ். சிவகுமாரன்
28/03/2013
noolaham.org தமிழ், தமிழர்களின் நூலுக்கும் அவற்றினை பதிவு செய்வதற்கும்
அரும்பணி ஆற்றி வருகிறது. இப்பணிமனைக்கு வந்த போது பணியாற்றுபவர்கள்
அக்கறையுடன் உதவினர். இப்பணி மேலும் வளர்ந்து மாணவர்கள், ஆய்வாளார்கள்,
அறிஞர்களுக்கு பயன்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
உ.இ.ம. இளவரசன் இராஜசேகரா
02/04/2013
மிக அருமையான முயற்சியொன்றில் ஈடுபட்டுக்கொடிருக்கின்ற நண்பர்களைக் காணவும்
அறிமுகமொன்றை ஏற்படுத்திக் கொள்ளவும் இங்கே வந்திருந்தேன். ஆவண மாநாட்டின்
முன்மொழிவு, 2011ன் ஆண்டறிக்கை என்பற்றைப் பெற்றுக்கொண்டேன்.
சுதர்சன்
12/05/2013
நூலகத்தினரின் அர்ப்பணிப்பான பணி என்னை மிகவும் கவர்கிறது.
இளம் தலைமுறை முக்கியமான பொறுப்பொன்றைத் தம் தோள்மேல் தாங்க முன் வந்துள்ளது.
சி. மௌனகுரு
13/05/2013
We are delighted to find out about the staggering and important work of the foundation. We are so happy that you will be part of our project open talk & very much look forward to future Collaborations preserving and discussing the materials that have defined and formed all of us.
Sharmini Pereira
Director, Raking Leaves
13/06/2013
I am very impressed by the digitization work you have been doing on tamil documents and your openness in sharing information. Asia Art Archive believes in "preservation through sharing" which is in common with the vision of your foundation.Thank you.
Linda Lee
Library Coordinator
Asia Art Archive
27/06/2013
நூலகத்தின் சேவை சமூகத்திற்கு தேவை. அந்த வகையில், இந்தப் பணித்திட்டத்தில் வேலை செய்வது எனக்கு மிகுந்த மனத்திருப்தியினைத் தருகிறது. நூலகம் இன்னும் நிறைய செய்யவேண்டும். எல்லோரும் அதற்கு பங்களிப்பும் செய்யவேண்டும்.
கெ. சர்வேஸ்வரன்
கணனி விஞ்ஞானத்துறை
யாழ் பல்கலைக்கழகம்
4/07/2013
தமிழ் மொழியின் தொன்மையினையும் செழுமையினையும் அடுத்துவரும் சந்ததிகளிற்கு எடுத்தியம்பவும் அனுபவிக்கவும் நூல்கள் பெரும்பங்காற்றுகின்றன.. இந்நூல்களை அழியாமல் பாதுகாப்பதில் "நூலகம்" திட்டத்தின் பங்கு இணையற்றதாக உள்ளது. சிறுதுளி பெரு வெள்ளம் ஆவது போல் பல்லாயிரம் நூல்களை தன்னகத்தே கொண்டு வளர்ந்து வரும் இத்திட்டம் செளிப்புற வழர்ந்து பணியாற்ற வாழ்த்துகிறேன்.
யூ. சாள்ஸ்
சிரேஸ்ட விரிவுரையாளர்/தலைவர்
கணனி விஞ்ஞானத்துறை
யாழ் பல்கலைக்கழகம்
4/07/2013
புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு மிகவும் பயன்படுகின்ற அருமையான பணியை தாங்கள் செய்து வருகின்றீர்கள். மூத்த இலக்கிய வாதிகளின் படைப்புக்களையும் படிக்கக் கூடிய வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளீர்கள். முயற்சி மேலும் தொடர பிராத்திக்கின்றேன்.
றிம்ஸா முஹம்மத்
19/08/2013
பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள்
தேவையான தகவல்களையும், ஆய்வு முயற்சிகளையும் இலகுவாகவும், வேகமாகவும்
மேற்கொள்ளக்கூடிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் எண்ணிம நூலகம்
எந்நாட்டிலிருப்பவரும் எந்நேரத்திலும் உடனடியாக அணுகும் வாய்ப்பைக் கொண்டிருப்பதும்
மிகவும் வரவேற்கத்தக்க விடயம். பெறுமதிமிக்க கிடைத்தற்கரிய பல நூல்கள் அழிந்து மறைந்து
இருக்கும் நிலையில் அழியும் நிலையில் உள்ள நூல்கள் எண்ணிமமயப்படுத்திப் பாதுகாப்பது
மிக உயர்ந்த நோக்கமாகும். ஈழத்து எழுத்தாளர்களும் படைப்புகளும் உலகளாவிய
அறிமுகம் பெறுவது நலமே. பாடப்புத்தகங்கள் மட்டுமல்லாது அனைத்து வெளியீடுகளும்
ஆவணங்களும் எண்ணிமப் படுத்தப்பட்டிருப்பது வெவ்வேறு துறைகளிலீடுபட்டுள்ள எல்லோருக்கும்
பெரும் பயன் அளிக்குமாதலால், இலாபகர நோக்கமற்று, பரந்த நன்னோக்குடன் செயற்படும்
தங்கள் நூலக,காப்பகப் பணிகள் மென்மேலும் சிறக்க, எல்லாம் வல்ல இறைவனின்
ஆசிகளை வேண்டி நன்றி கூறிக் கொள்ளும்.
திருமதி. இராஜினி தேவராஜன்