Noolaham Digital Library Mediawiki refreshing links
அறுபட்ட கோப்புகள் என்ற பகுப்பில் அட்டைப்படம் தரவேற்றப்படாத கட்டுரைகள் காணப்படும். ஆனால், அவற்றின் எண்ணிக்கை தவறாகக் காணப்பட்டமையால் Mediawiki ல் வழங்கப்பட்டுள்ள RefreshLinks என்ற உக்தியைப் பயன்படுத்தி மீண்டும் அவ் எண்ணிக்கைகளை சரியாகக் காட்சிப்படுத்த உதவியது. அது தொடர்பான ஒரு சிறு விளக்க documentation ஆக இது அமையும்.
Mediawiki Guide for RefreshLinks.php script
- மேலுள்ள இணைப்பினைப் பயன்படுத்தி RefreshLinks.php என்ற script ஐ server ல் இயக்குவதன் மூலம், மீடியாவிக்கியில் கொடுக்கப்பட்ட இணைப்புகள், பக்கங்கள், பகுப்புகளில் காணப்படும் எண்ணிக்கை என்பனவற்றை சரி செய்துகொள்ள முடியும்.
- server ல் மீடியாவிக்கி கோப்புகள் உள்ள folder க்குள் maintenance என்ற folder க்குள் இருக்கும் refreshLinks.php என்ற கோப்பினை இயக்க வேண்டும்.
php refreshLinks.php மேல் இணைக்கப்பட்ட இணைப்பில் காட்டப்பட்டது போலவும் குறிப்பிட்ட தொடக்க பக்கத்தின் id ஐயும் எவ்வளவு பக்கங்களில் உள்ள link களை refresh செய்ய வேண்டும் என்ற parameter ஐயும் கொடுத்து இவ் script ஐ இயக்கினால் server ல் memory leak (memory பற்றாக்குறை) பிரச்சினைகள் வரும் வாய்ப்புக்கள் குறைவு. (நூலகத்தில் இதுவரை 193++ பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரே தடவையில் இவ் script ஐ இயக்குவது அவ்வளவு நல்ல செயல் அல்ல)